காளப்பநாய்க்கன்பட்டியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

காளப்பநாய்க்கன்பட்டியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
X

காளப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

காளப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா, காளப்பநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள, பலிஜாவாரு நாயுடுகள் பஜனை மடாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ண கானம் என்னும் 22-ம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இன்று காலை 10 மணி அளவில் துவங்கிய நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையும் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. மாலை இரண்டாம் கால ஸ்ரீ கிருஷ்ணர் பூஜை நிறைவு பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, வானவேடிக்கை, மேளதாளங்களுடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடைபெற்றது. நாளை 20ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மூன்றாம் கால ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையும், மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!