கொல்லிமலை சிறப்பு முகாம்: 475 மலைவாழ் மக்களுக்கு மருத்துவப்பரிசோதனை
கொல்லிமலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு, மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளை வழங்கினார். அருகில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.
கொல்லிமலையில் நடைபெற்ற, நலம் காப்போம் கொல்லிமலை சிறப்பு முகாமில் 475 மலைவாழ்மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயாசிங் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து, மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகளையும், ரெட்கிராஸ் சார்பில் சானிடைசர் மாஸ்க் போன்ற பொருட்களையும் வழங்கினார்.
கொல்லிமலையில் உள்ள செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள சீக்குப்பாறைபட்டி, கூச்சக்கிராய்பட்டி, தண்ணிமாத்திப்பட்டி, பூங்குளம்பட்டி, சக்கரைப்பட்டி, சித்தூரனிப்பட்டி, திண்டுப்பட்டி, புரணிக்காடு மற்றும் கீழ்சோளக்காடு ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலாவது முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 24 குழந்தைகள் உள்பட 182 ஆண்களும், 293 பெண்களும் என மொத்தம் 475 நபர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உடல் எடை, உயரம் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 16 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொல்லிமலையில் மொத்தம் 16 இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
முகாமில் டிஆர்ஓ கதிரேசன், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், சப் கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், பிஆர்ஓ சீனிவாசன், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை 30ம் தேதி, புங்கம்பட்டி, சோரப்பிள்ளைவளவு, மேலூர், வடகாடு, ஊர்புறம், போல்காடு, கழுர், வாழக்காடு, விளாரிக்காடு, தோட்டிக்காடு, செட்டிக்காடு மற்றும் அருவாங்காடு ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பெரக்கரை நாடு, தோட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu