ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்

ஏரியில் மண் அள்ளிய 4 பேர் கைது: பொக்லைன், டிராக்டர் பறிமுதல்
X
சேந்தமங்கலம் அருகே, அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் ஏரியில் சம்பவத்தன்று இரவு, அனுமதியின்றி, பொக்லைன், டிராக்டர் இயந்திரங்கள் மூலம் சிலர் மண் அள்ளுவதாக பவித்திரம் விஏஓவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அள்ளியதை கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த டிரைவர்கள் பவித்திரம் புதூர் நவலடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் ( 35), துரைசாமி (50), பிரபாகரன் (25), திருச்சி மாவட்டம் வாழசிராமணியை சேர்ந்த பிரபு (31) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களின் உரிமையாளர் பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in agriculture india