எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

எருமப்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பாம்பு கடித்ததால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவருடைய மனைவி கற்பகம் (45). சம்பவத்தன்று இரவு கற்பகம், வீட்டின் வெளியே வந்தபோது, அங்கிரந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. அவர் வலி தங்க முடியாமல் அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து கற்பகத்தை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பு கடித்து பெண் உயிரிழந்ததால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!