சேந்தமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் ஏலம்

சேந்தமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் ஏலம்
X
சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வழக்குகளில் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டூ வீலர்கள், நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் விபரங்கள் குறித்து, சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்கள் வாகனத்தின் ஆவணங்களை சமர்ப்பித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு மேல் உரிமை கோரப்படாத வாகனங்கள், பொது ஏவத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!