புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
X

பைல் படம்.

புதுச்சத்திரம் அருகே பெற்றோர் கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் மவுனிஷா (14). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர் அவரை நன்றாக படிக்கும்படி கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவி கடந்த 18-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு போராடிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மவுனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!