எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, இவரது 17 வயது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சேலம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது தாய் காந்திமதி (37) தனது மகளை பல ஆஸ்பத்திகளுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும் நோய் சரியாகவில்லை.

இதனால் விரக்தியடைந்த, கவிதா சம்பவத்தன்று, வீட்டில் இருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கமடைந்த அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 நாள் கழித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!