கொல்லிமலை டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திருப்பிக் கொடுப்போருக்கு ரூ.10

பைல் படம்.
TASMAC News Today Tamil - நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை மீது செல்ல77 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கடந்துசெல்ல வேண்டும்.
இந்த நிலையில் கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு மற்றும் செங்கரை ஆகிய 3 இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளில், மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக் குடித்து விட்டு மலைப்பகுதியில் ஆங்காங்கே காலி மதுபாட்டில்களை வீசியும் உடைத்தும் செல்கின்றனர். இதனால் மலையின் இயற்கை சுற்றுச்சூழல் சீர்கோடு ஏற்பட்டு, மலைவாழ் மக்கள், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் மலைப்பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில், மது பிரியர்கள் மது வாங்கிக் குடித்த பின்னர் காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுக்கடையில் திருப்பி கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி, நேற்று முதல் கொல்லிமலையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி மதுக்கடையில் குவார்ட்டர், ஆஃப், புல் மற்றும் பீர் பாட்டில்கள் என எந்த வகையாக இருந்தாலும் அந்த பாட்டில்கள் மீது அந்தந்த கடைகளுக்கு உரிய சீல் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கொல்லிமலையில் மதுப்பிரியர் எந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கினாலும், அதே கடையில் காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் ரூ.10 கொடுக்கப்படும் என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்லிமலையில் உள்ள 3 மதுக்கடைகளிலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த டாஸ்மாக் பணியாளர்களிடம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துவிளக்கி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu