நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பென்ட்
பைல் படம்.
சேந்தமங்கலம் அருகே, நகைக் கடன் தள்ளுபடி செய்ய ரூ. 2,000 லஞ்சம் கேட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சஸ்பென்ட் நீக்கம் செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம் தாலுக்கா, பேளுக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு உத்தரவின்பேரில், இந்தச் சங்கத்தில் நகைக்கடன் பெற்ற 311 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பயனாளிகள் சிலரிடம் அந்த கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரியும் செயலாளர் கோவிந்தன் (50) என்பவர், நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்துக்கு ரூ.2,000 செலுத்த வேண்டி இருப்பதால் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தலா ரூ.2,000 பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பயனாளி ஒருவரிடம் லஞ்சம் கேட்டது, ரூ.7,000 வரை சிலர் லஞ்சமாக கொடுத்து வருகின்றனர் என அவர் கூறுவது தொடர்பான வீடியோ பயனாளி ஒருவரால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது.
இது குறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் பேளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது அந்த சங்கச் செயலாளர் கோவிந்தன் பயனாளிகளிடம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செல்வகுமரன், சங்க செயலாளர் கோவிந்தனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu