உபகரணங்கள் வழங்கக்கோரி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உபகரணங்கள் வழங்கக்கோரி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

உபகரணங்கள் வழங்கக்கோரி சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு உபகரணங்கள் வழங்கக்கோரி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை வகித்தார்.

சாலை பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மழை கோட், கடப்பாரை, மண்வெட்டி போன்ற பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறியும் அவர்களின் நடவடிக்கை குறித்து நாமக்கல் நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

போராட்டத்தில் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் தமிழ், துணைத்தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்