எருமப்பட்டி உட்கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

எருமப்பட்டி உட்கோட்ட மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
X

பைல் படம்.

எருமப்பட்டி உட்கோட்ட மின்சார அலுவலகம் மற்றும் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட, எருமப்பட்டி உட்கோட்ட அலுவலகம் எருமப்பட்டி சுப்புராயர் தெருவிலும், எருமப்பட்டி பிரிவு அலுவலகம் எருமப்பட்டி கைகாட்டி பிள்ளையார் கோவில் தெருவிலும் தற்போது இயங்கி வருகிறது. வரும் 27ம் தேதியில் இருந்து மின்சார வாரியத்திற்கு, துணை மின்நிலைய வளாகத்திற்குள் புதியதாக கட்டப்பட்டுள்ள மின்வாரிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

எருமப்பட்டி உட்கோட்டப் பகுதியல் உள்ள எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி கிராமம், தெற்கு/நாமக்கல் பிரிவுகளுக்கு உட்பட்ட நுகர்வோர்கள். அரளிப்பள்ளம், கோணக்காடு, வடவத்தூர், முட்டாஞ்செட்டி. தேவராயபுரம், சிங்களங்கோம்பை, கைகாட்டி, காவக்காரன்பட்டி, கோணங்கிப்பட்டி, பகுதி மின்நுகர்வோர்கள் இனிவரும் காலங்களில், மின்வாரியம் தொடர்பான பணிகளுக்கு புதிய அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!