சேந்தமங்கலத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

சேந்தமங்கலத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
X

சேந்தமங்கலம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சேந்தமங்கலத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் சேந்தமங்கலம் வட்டாரவளமையத்தில். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 8 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நடைப்பயிற்சி கருவி, மூளைமுடக்குவாத நாற்காலி, மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பயிற்சி பெட்டகம் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டது. உபகரணங்களை பயன்படுத்தும் முறை குறித்து பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரியர் கோகிலா, சிறப்பாசிரியர்கள் யோகராஜ், சுகனேஸ்வரி, வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare