சேந்தமங்கலம் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு

சேந்தமங்கலம் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு
X
சேந்தமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா, திருமலைப்பட்டி பஞ்சாயத்து, வீரம்பட்டி கிராமத்தில், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வசிக்கின்றனர். அப்பகுதியில் கனகராஜ்(40), என்பவர், மலை அடிவாரத்தில், அரசு மலை புறம்போக்கு நிலத்தில் கொட் டகை அமைத்து, பல ஆண்டுகளாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதுகுறித்து சிலர், சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் கொடுத்தவர்களும், சில இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மேலும் புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் ஆர்.ஐ. மணிமேகலை, வி.ஏ.ஓ. தனபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு செய்தனர், அப்போது கனகராஜ் செய்திருந்த ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த கனகராஜ் தரப்பினர், ராஜேந்திரன், முருகேசன், அப்பீஸ், கணபதி ஆகியோர் மலை அடிவாரத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து நாங்கள் புகார் அளித்தும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல் பட்டு வருகின்றனர். நாங்கள் முதலில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுங்கள், பின், அரசு குன்று புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்துள்ளதை நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறி மனு கொடுத்தனர். தாசில்தார் செந்தில்குமார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.ஐ. மணிமேகலை, வி.ஏ.ஒ. தனபால் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!