சேந்தமங்கலம் துணை மின் நிலைய பகுதியில் 15ம் தேதி மின்நிறுத்தம்

பைல் படம்
Power Cut -சேந்தமங்கலம் பகுதியில் வரும் 15ம் தேதி மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 15ம் தேதி சனிககிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரத் தடை ஏற்படும்.
இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோணானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu