சேந்தமங்கலத்தில் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

X
பைல் படம்.
By - P.Nathan, Reporter |20 Sept 2021 3:45 PM IST
சேந்தமங்கலம் பகுதிகளில் வரும் 22ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்தார்.
இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 22ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu