எருமப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
X
எருமப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரின் இளைய மகன் அரவிந்த் (17) வளையப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அரவிந்த் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அவனை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அவன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மாணவன் அரவிந்த் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் பிணமாக மிதந்த அரவிந்த் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து மாணவனின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி