சரக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 பள்ளி மாணவி உயரிழப்பு

சரக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 பள்ளி மாணவி உயரிழப்பு
X

மாணவி அகிலா (பழைய படம்).

கொல்லிமலையில் பள்ளிக்கு செல்லும்போது சரக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லிமலை கிராய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி, இவரது மகள் அகிலா (16). மேல்பூசணி குழிப்பட்டியை சேர்ந்தவர் ரூபிகா (16). இவர்கள் 2 பேரும் முள்ளுக்குறிச்சியில் உள்ள ஜி.டி.ஆர். அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். அகிலா, ரூபிகா இருவரும் வழக்கமாக அரசு பஸ்சில் பள்ளிக்கு செல்வார்கள். கடந்த 8-ந் தேதி காலை அவர்கள் 2 பேரும் பஸ்சை தவற விட்டனர். இதனால் அவர்கள் கொல்லிமலையில் இருந்து முள்ளுக்குறிச்சி நோக்கி காய்கறி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோவின் பின்னால் அமர்ந்து சென்றனர். ஆட்டோவை கொல்லிமலை நரியன்காடு பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (32) ஓட்டி சென்றார்.

மலைப்பாதையில் சென்ற அந்த ஆட்டோ, மேல் பூசணிகுழிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, ஆட்டோ மேல் அமர்ந்திருந்த அகிலா, ரூபிகா இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தரியில் சேர்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அகிலா சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil