சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

பைல் படம்.

மின்னாம்பள்ளி சேவை மைய கட்டடத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள மின்னாம்பள்ளி சேவை மைய கட்டடத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தசிறப்பு முகாமிற்கு நாமக்கல் தாசில்தார் திருமுருகன் தலைமை வகித்தார்.

மின்னாம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் நடேசன், ஆர். டி.ஓ மஞ்சுளா ஆகியோர் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகைக்கான உத்தரவுகளை வழங்கினார்கள். இம்முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்டன. 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடியாக பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டன.

Tags

Next Story
agriculture iot ai