எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த நீர்வழி புறம்போக்கு நிலம் மீட்பு

எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த  நீர்வழி புறம்போக்கு நிலம் மீட்பு
X

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

எருமப்பட்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த நீர்வழி புறம்போக்கு நிலம் மீட்fகப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பவித்திரம்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள, நவலடிபட்டி கிராமத்தில் கோம்பைக்காடு செல்லும் ரோட்டில், அரசுக்கு சொந்தமான நீர்வழி புறம்போக்கு நிலம் 3.85 ஏக்கர் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையொட்டி சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் கோம்பைக்காட்டில் உள்ள குட்டை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் ஆக்கிரமிப்பை காலி செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து நவலடிபட்டி கோம்பை பகுதிக்கு சென்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) பாண்டியன், துணை தாசில்தார் பாரதிராஜா, பிடிஓ பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த நிலம் பஞ்சாயத்திற்கு சொந்தமானது என பெயர் பலகை வைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் எருமப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) முருகவேல் பாண்டியன் தலைமையில் எஸ்.ஐ. பூபதி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself