சேந்தமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் - சாலைப்பணியாளர்களுக்கு நோட்டீஸ்

சேந்தமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் -  சாலைப்பணியாளர்களுக்கு நோட்டீஸ்
X

கோப்பு படம் 

சேந்தமங்கலத்தில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலைப்பணியாளர்கள் 7 பேருக்கு, துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த 7 சாலைப் பணியாளர்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அன்று சம்பளமும் பிடித்தம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். இது சாலைப்பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே உயர் அதிகாரிகள் மீதான புகார் குறித்து, நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!