நாமக்கல்லில் முதியோரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியில் முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த குழந்தைவேல் என்பவரது மனைவி வசந்தி ( 41). இவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவரிடம் மானத்தியை சேர்ந்த சுகுமாரன் (72) , முதியோர் உதவித்தொகை வழங்க கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பித்து இருந்தார். அப்பபோது வசந்தி, முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு வசந்தி, சுகுமாரனிடம் கேட்டு உள்ளார்.
ஆனால், சுகுமாரன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் இதுகுறித்து அவர் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் சுகுமாரன் ரசாயனம் தடவப்பட்ட ரூ.4 ஆயிரத்தை வசந்தியிடம் கொடுத்தார். அங்கு தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வசந்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் வசந்தியை சஸ்பெண்ட் செய்ய திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜிக்கு நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் மணிராஜ் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu