கொல்லிமலையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், மருத்துவ வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்பட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறை சிகிச்சை, நோயாளிகளுக்கு வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகிய சேவைகள் இந்த திட்டத்தில் அளிக்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, பைல்நாடு பஞ்சாயத்து மேக்கினிக்காடு கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்க திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் மலை கிராமங்களில் மலைவாழ் மக்களின் வீடுகளுக்குச் சென்ற கலெக்டர் அங்குள்ள நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். தொடர்ந்து, துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார். மேலும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டவர்களை பாராட்டி கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
நாமக்கல் சப்கலெக்டர் கோட்டைக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் வளர்மதி, முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி, மாவட்ட பழங்குடியினர் நலத் துறை அலுவலர் ராமசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu