கொல்லிமலையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி: 6 பேர் காயம்

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி: 6 பேர் காயம்
X

பைல் படம்.

கொல்லிமலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.

கொல்லிமலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள சிந்தாமணியூரை சேர்ந்தவர் சுந்தரம் (35). தறிப்பட்டறை அதிபர். இவர் தனது மகன்கள் சந்திரசேகரன்(38), அசோக்குமார்(35), உறவினர்கள் சுகுமார், கீர்த்திகா மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சிந்தாமணியூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கோயிலுக்கு தரிசனத்துக்கு சென்றனர். காரை இளைய மகன் அசோக்குமார் ஓட்டிச்சென்றார். அப்போது மலைப் பாதையின் 34வது கொண்டை ஊசி வளைவில் மேலே ஏறும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுந்தரத்திற்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 6 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசா ர், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!