எருமப்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

எருமப்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
X

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எம்.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் எ.வாழவந் பஞ்சாயத்தில் காரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் கீழ் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்ஸிஜன் அளவை பல்சாக்சி மீட்டர் கொண்டு கணக்கெடுக்கும் தன்னார்வலர்களிடம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்களைக் கேட்டறிந்தார். தொடர்ந்து எ.வாழவந்தி பஞ்சாயத்தில், சுகாதார வளாகம் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு கட்டுமானப்பணிகளை ஆய்வுசெய்தார்.

அங்கு ரூ.69.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தையும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தன்கீழ் கட்டப்படும் கட்டிடத்தையும், மேட்டுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிøயும் அவர் பார்வையிட்டு ஆய்வு செயதார். ஜம்புமடை ரேசன் கடையில் மண்ணெண்ணெய் இருப்பு குறித்து பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளபடி, மண்ணெண்ணெய் பேரலில் இருப்பு உள்ளதா என்பதை கலெக்டர் அளந்து பார்த்தார்.

எருமப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும், தினந்தோறும் வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை, காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுடன் வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

எம்.மேட்டுப்பட்டிபஞ்சாயத்தில் ஜல் ஜீவன் இயக்கம் திட்டத்தின்கீழ் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், எம்.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வுகளின்போது டிஆர்டிஏதிட்ட இயக்குநர் மலர்விழி, பிஆர்ஓ சீனிவாசன், பிடிஓக்கள் அருளப்பன், குணாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!