சேந்தமங்கலத்தில் கொரோனா நிவாரண உதவி - எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்

சேந்தமங்கலத்தில் கொரோனா நிவாரண உதவி - எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்
X

சேந்தமங்கலத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஓவியக்கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.

சேந்தமங்கலத்தில், நலிவடைந்த ஓவியக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.

சேந்தமங்கலத்தில், கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த ஓவியக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் 46 ஓவியக் கலைஞர்களுக்கு வேஷ்டி, அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முன்னதாக அக்கியம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் வரதராஜன் ஏற்பாட்டின் பேரில், அரிசி மற்றும் மளிகை சாமான்களை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.

நகர திமுக செயலாளர் தனபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் பெரியசாமி, தியாகராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!