நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம்  பனை விதைகள் நடும் பணி துவக்கம்
X

சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை பகுதியில் பனை மரங்கள் நடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

நைனாமலை வனப்பகுதியில் 8 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலையில், புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த கோயிலுக்குச் செல்லும் அடிவாரப் பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் ஏற்படும் மண் சரிவை தடுப்பதற்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காகவும் பனை விதைகளை நடவு செய்ய வனத்துறையினர் முடிவு செய்தனர்.

நாமக்கல் வனச்சரகம் சார்பில், இதற்காக 8 ஆயிரம் பனை விதைகள் வாங்கப்பட்டுள்ளன. வனச்சரகர் பெருமாள் மேற்பார்வையில் வனவர் சந்திரசேகரன், வனக் காப்பாளர்கள் பூபதி, மாதேஸ்வரன் ஆகியோர் நைனாமலையில், பனை விதைகள் நடவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!