கொல்லிமலையில் வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

கொல்லிமலையில் வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
X

கொல்லிமலையில் நடைபெற்ற விழாவில், வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வணிகர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வழிகாட்டுதல் பேரில், பேரமைப்பின், இணைப்பு சங்கமான கொல்லிமலை அனைத்து வணிகர் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கொல்லிமலை அனைத்து வணிகர் நல சங்கத்தின் தலைவர் வருணன் தலைமை தாங்கினார். செயலாளர் பூபதி வரவேற்றார். முதல்கட்டமாக செங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவின்போது, தொடர்ந்து, படிப்படியாக, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, குண்டூர் நாடு உள்ளிட்ட அனைத்து பகுதியில் உள்ள உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அனைத்து வணிகர்களும், தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினாரக இணைந்து, அரசின் பல்வேறு நலதிட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருகிற மே 5ம் தேதி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டு, ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில், அனைத்து வணிகர்களும், குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் சங்கத்தின் பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings