கொல்லிமலையில் தொடர் கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொல்லிமலையில் தொடர் கனமழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
X

கொல்லிமலையில் உள்ள சிற்றருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

கொல்லிமலையில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொல்லிமலை பகுதியில் சுமார் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பசுமையாக, கண்களுக்கு ரம்மிகயமாக காட்சியளிக்கிறது.

தொடர் மழையால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கொல்லிமலையில் ஆகாயகங்கை, நம்ம அருவி, மாசிலா அருவி மற்றும் சிற்றருவி உள்ள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் அரப்பளீஸ்வரர் கோயில், தோட்டக்கலை பூங்கா, வியூ பாயின்ட், படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு சென்று இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். அருவி பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself