கனமழையால் கொல்லிமலை மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் கொல்லிமலை மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

கொல்லிமலை மலைப்பாதையில், 10வது கொண்டை ஊசி வளைவில் பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மலைப்பாதையில், பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பிரபலமான சுற்றுலாத்தலமாகும். அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து, 75 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, இந்த மலைக்கு செல்ல வேண்டும்.

கடந்த 3 நாட்களாக கொல்லிமலை பகுதியில், பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மலையை ஒட்டியுள்ள பைல்நாடு பஞ்சாயத்து பகுதியில் உள்ள காட்டாற்றில், மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதைத்தொடர்ந்து, காரவள்ளி அடிவாரப் பகுதியில் உள்ள அத்தியூத்து ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பலத்த மழையால், காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் 10வது கொண்டை ஊசி வளைவில் 2 பெரிய பாறைகள் சரிந்து, நடுரோட்டில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக பாறைகளை அகற்றி சாலையை சீரமைத்தனர். அதன் பிறகு தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!