கொல்லிமலையில் இறந்துகிடந்த காவலர்: உடலை மீட்டு போலீசார் விசாரணை

கொல்லிமலையில் இறந்துகிடந்த காவலர்: உடலை மீட்டு போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கொல்லிமலையில் நாமக்கல்லைச் சேர்ந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (33). இவர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், அவர் கொல்லிமலைக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கொல்லிமலை தின்னனூர்நாடு சோளப்பள்ளம் என்ற இடத்தில் காவலர் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த வாழவந்திநாடு போலீசார் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.

காவலர் ஆனந்தன் இறப்புக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதணை முடிவில் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இது தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!