மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கொல்லிமலையில் 1,639 பேர் பயன்
மக்களைத் தேடி மருத்துவம் ( பைல் படம்)
கொல்லலிமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,639 மலைவாழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.இது குறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா அயல்நாடு பஞ்சாயத்து, மேக்கினிக்காடு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்த டுப்பு மருத்துவத்துறை சார்பில் கடந்த 5-ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மருத்துவ வாகனத்தை கெலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் களப்பணியாளர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்ட சர்க்கரை நோயாளிகளின் வீடுகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங், மருத்துவ குழுவினருடன் நேரடியாக சென்று மருந்துகளை வழங்கினார்.
கொல்லிமலை தாலுகாவில் முதற் கட்டமாக 16 பெண் சுகாதார தன்னார்வலர்களும், ஒரு இயன் முறை டாக்டரும், ஒரு நோய் ஆதரவு சிகிச்சை நர்சும் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 15 தாலுக்காக்களில் மொத்தம் 48 ஆயிரத்து 340 நோயாளிகள் தொற்றா நோய்ப் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் முதல் கட்டமாக கொல் லிமலை தாலுகாவில் கடந்த 5-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 1,051 உயர் ரத்தக் கொதிப்பு நோயாளிகள், 163 சர்க்கரை நோயாளிகள். 113 உயர்ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் 160 பேருக்கு வீட்டுமுறை சிகிச்சை. 152 பேருக்கு இயன் முறை சிகிச்சை என மொத்தம் 1,639 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும் 1,327 பேருக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu