கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் கலெக்டர் நேரடியாக குறைகேட்பு

கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் கலெக்டர் நேரடியாக குறைகேட்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், கொல்லிமலை, குண்டூர் நாடு பஞ்சாயத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.

கொல்லிமலையில், மலைவாழ் மக்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்,கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், குண்டுனிநாடு, அடுக்கம்புதுகோம்பை மற்றும் குண்டூர் நாடு பஞ்சாயத்து பகுதிகளை நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அங்குள் மலைவாழ் மக்களிடம் அவர் கலந்துரையாடிஅவர்களின் குறைகளை கேட்டறிந்தார். திரளான பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்பகுதியில், நடமாடும் வாகனத்தின் மூலம் முறையாக ரேசன் பொருட்கள் வழங்கப்படுவதையும், சுகாதார துறையின் மூலம் நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் பார்வையிட்டு உறுதி செய்தார்.

18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்றும், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மலைவாழ்மக்கள் தேர்தலில் வாக்களிக்கு அருகிலேயே வாக்குச்சாவடி அமைக்க அவர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். சாதிச்சான்று வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக சாதிச்சான்று வழங்க அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரகூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் தணிக்கை செய்த கலெக்டர், அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை பார்வையிட்டார்.

மேலும், பள்ளியில் வகுப்பறைகள், கம்ப்யூட்டர் லேப்கள், சுற்றுப்புற தூய்மை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன்மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!