எருமப்பட்டி இலங்கை அகதிகள் முகாம்: நாமக்கல் கலெக்டர் ஆய்வு

எருமப்பட்டி இலங்கை அகதிகள் முகாம்:   நாமக்கல் கலெக்டர் ஆய்வு
X

எருமப்பட்டி இலங்கை அதிகள் முகாமிற்கு சென்ற நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

எருமப்பட்டியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எருமப்பட்டியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா, எருமப்பட்டியில், இலங்கை அகதிகள் உள்ளது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், முகாமில் உள்ள மக்கள் வழங்கிய குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாய கூடம், புதியக மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இலங்கை அகதிகள் முகாமில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமில் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ழ்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!