சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், இன்று சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு திடீரென்று வருகை தந்தார். அங்குள்ள அலுவலர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களின் குறைதீர் மனுக்கள் பதிவேடு மற்றும் குறைதீர் மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பதிவேடுகளை சரிபார்த்து, அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், அதிகாரிகளிடம் பதிவேடுகள் அனைத்தையும் 15 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று , கலெக்டர் கூறினார். மனு அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கனிவோடு நடந்துகொள்வதுடன், மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், சமூக நலத்திட்ட தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!