நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
X

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும், வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி பஞ்சாயத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.23.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்ட நுண் உர உற்பத்தி மையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கார்கூடல்பட்டி பஞ்சாயத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.70.25 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

நாரைக்கிணறு பஞ்சாயத்தில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து கார்கூடல்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை பார்வையிட்ட அவர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன், பிடிஓ சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!