சேந்தமங்கலத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

சேந்தமங்கலத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X
சேந்தமங்கலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேந்தமங்கலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது காரில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேந்தமங்கலம் அருகிலுள்ள மின்னாம்பள்ளி அருகே காரை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. பணம் எடுத்து வந்த கார்த்திக் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்டதால் அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை கருவூலத்தில் செலுத்தினர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது