வளையப்பட்டி ரேசன் கடையில் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் ஆய்வு

வளையப்பட்டி ரேசன் கடையில் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் ஆய்வு
X

வளையப்பட்டி ரேசன் கடையில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வளையப்பட்டி ரேசன் கடையில் சேந்தமங்கலம் எம்எல்ஏபொன்னுசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி சந்தைமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேசன் கடையில் உணவு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து ரேசன் கடையை முறையாக பராமரிக்க அலுவலர்களை வலியுறுத்தினார்.

மேலும் ரேசன் கடையில் கைவிரல் ரேகையை சரிவர பதிவாவதில்லை என்றும், இதனால் பொருட்கள் வாங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்குள்ள வாரச்சந்தைக்கு சென்ற எம்எல்ஏவிடம் சந்தையைச் சுற்றியுள்ள மண் தரையை கான்கீரிட் தளமாக மாற்றியும், சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கூறினார். இந்த ஆய்வில் மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி மற்றும் ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business