எருமப்பட்டி பஞ்சாயத்து தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்
எருமப்படி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.
சேந்தமங்கலம் சட்டசபைதொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்து பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியனம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பிடிஓக்கள் குணாளன், அருளாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 24 பஞ்சாயத்து தலைவர்களிடம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரனங்கள் மற்றும் மருந்துகளை வழங்கிப் பேசியதாவது: கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாயத்து தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தன்னார்வலர்கள் மூலம் சளி, காயச்சல் உள்ளவர்களை கணக்கெடுத்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விமலாசிவக்குமார், டவுன் பஞ்சாயத்து செயலாளர் பழனியாண்டி, வட்டார மருத்துவ அலுவலர் லலிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu