மாடித்தோட்டம் அமைக்க பொருட்கள் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்

மாடித்தோட்டம் அமைக்க  பொருட்கள் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
X

நாமகிரிப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான பொருட்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமகிரிப்பேட்டையில், பொதுமக்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கான பொருட்களை, அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக முதல்வரின், ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு, மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் கீழ், பல்வேறு திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப்பயிர்கள் பயிரிட்டு பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை இயற்கை முறையில் மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டங்கள் செயல்படத்தப்படுகிறது.

இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.3.37 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. மாடித்தோட்டம் அமைக்க தேவையான இடுபொருட்கள், 6 வகை காய்கறி விதைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 6 தென்னை நார்க்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் 200கிராம், இயற்கை பூச்சிக்கொல்லி 100 மி.லி. ஆகியன வழங்கப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓ மஞ்சுளா, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் செல்வராஜ், ஜெயக்குமார், பொன்நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!