சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி  செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
X
சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் ஸ்ரேயாசிங் சென்றார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் அவர் காரில் நாமக்கல் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கல்குறிச்சி பகுதியில் வந்தபோது, அவ்வழியாக செம்மண் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி கலெக்டர் சோதனை செய்தார்.

அந்த லாரியில் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக செம்மன் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த கலெக்டர், பேளுக்குறிச்சி போலீசாரை அங்கு வரவழைத்து அவர்களிடம் லாரியை ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!