கா.நா பட்டியில் மின்கம்பத்தில் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது

கா.நா பட்டியில் மின்கம்பத்தில் லாரி மோதி  தீப்பிடித்து எரிந்தது
X

கோப்பு படம் 

கா.நா பட்டியில் மின்கம்பத்தில் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது.

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரெட்டி காலனி உள்ளது. சம்பவத்தன்று மதியம், சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம்புதூரைச் சேர்ந்த செல்வம் என்பவர், ஒரு லாரி சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக அங்கு கொண்டு வந்தார். அப்போது அங்கிருந்து மின் கம்பம் ஒன்றில் லாரி உரசியது. அதனால், அந்த மின்கம்பம் முறிந்து லாரி மீது விழுந்தது. அப்போது மின்சார வயரில் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் பாரத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதை கண்ட லாரி டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். லாரியில் இருந்த வைக்கோல் பாரம் முழுவதும் தீ பரவி வேகமாக எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் உருவானது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக, 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், லாரியில் இருந்த வைக்கோல் பாரத்தை கீழே தள்ளி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 3 டன் எடையுள்ள வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பாலானது. லாரியின் ஒரு பகுதி சேதமடைந்தது. சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags

Next Story
ai in future agriculture