கொல்லிமலை: கட்டுப்பாட்டை இழந்து எம்எல்ஏவின் பழக்கடைக்குள் புகுந்த லாரி

கொல்லிமலை: கட்டுப்பாட்டை இழந்து எம்எல்ஏவின் பழக்கடைக்குள் புகுந்த லாரி
X

கொல்லிமலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி,  எம்எல்ஏ பொன்னுசாமிக்கு சொந்தமான பழக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

கொல்லிமலையில். கட்டுப்பாட்டை இழந்த லாரி எம்எல்ஏவுக்கு சொந்தமான பழக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்து, ஒரு டிப்பர் லாரி ஜல்லிக்கற்கள் பாரம் ஏற்றிக் கொண்டு கொல்லிமலைக்கு சென்றது. அந்த லாரியை அக்கியம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (34) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். கொல்லிமலையில் உள்ள, அரியூர் சோளக்காடு அருகே ஜல்லிக்கற்கள் பாரத்தை இறக்கிவிட்டு, அந்த லாரி மீண்டும் சேந்தமங்கலம் நோக்கி திரும்பி வந்தது.

சோளக்காடு பஸ் நிறுத்தம் அருகே அந்த லாரி வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் இருந்து திமுக எம்எல்ஏ பொன்னுசாமிக்கு சொந்தமான பழக்கடைக்குள் புகுந்தது. இதனால் கடையின் ஒரு பகுதி சேதமானது. அப்போது கடைக்குள் யாருமில்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தமிழ்செல்வனுக்கு உடலில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாழவந்திநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!