சேந்தமங்கலம் ஒன்றிய பகுதியில் புதிய திட்டப்பணிகள் துவக்க விழா

சேந்தமங்கலம் ஒன்றிய பகுதியில் புதிய திட்டப்பணிகள் துவக்க விழா
X

சேந்தமங்கலம் அருகில் புதிய திட்டப்பணிகளை, ராஜேஷ்குமார் எம்.பி துவக்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ பொன்னுசாமி.

சேந்தமங்கலம் பகுதியில் புதிய ரோடுகள் அமைக்கும் பணியை, ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேல்பட்டி பஞ்சாயத்து ஏரிக்கரை பகுதியில் குடிநீருக்காக மினிடேங்க் அமைத்தல், தைலாக்குட்டை முதல் ராமசாமி தோட்டம் வரை ரூ.3.16 லட்சம் மதிப்பில் புதிய ரோடு அமைத்தல், மேல்பட்டி சாலை முதல் சின்னக்காடு வரை ரூ. 19.30 லட்சம் மதிப்பீட்டில் ரோடு அமைத்தல் ஆகிய திட்டப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளரான, ராஜேஷ்குமார் எம்.பி. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமாலா, பஞ்சாயத்து தலைவர் அம்மாசி, துணைத் தலைவர் சந்திரன், சேந்தமங்கலம் நகர திமுக செயலாளர் தனபாலன், ஒன்றிய கவுன்சிலர் திராவிட மணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!