சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை

சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல்படம்.

கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டேண்ட் பகுதியில், பழக்கடை நடத்தி வந்தவர் குமரவேல் (55), அவரது மனைவி கண்ணகி (45), இவர்களக்கு 2 மகள்கள் உள்ளனர். குமரவேல் லாரித் தொழிலும் நடத்தி வந்தார். லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் தடுமாறி வந்துள்ளார். கடன்கொடுத்தவர்களின் தொல்லையால், மன உளைச்சல் அடைந்த குமரவேல், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!