எருமப்பட்டியில் பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

எருமப்பட்டியில் பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற தனியார் பஸ், தொழிலாளி மீது மோதிய விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

எருமப்பட்டி கைகாட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் ரத்தினம் (35). இவர் எருமப்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே அம்மிக்கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அங்கிருந்த டீக்டை ஒன்றில், டீ குடித்துவிட்டு ரோட்டை கடந்து வந்தார். அப்போது, நாமக்கல்லில் இருந்து துறையூர் நோக்கி சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எருமப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!