கொல்லிமலை கட்டுப்பாடு ஆதார்அட்டை கட்டாயம்...

கொல்லிமலை கட்டுப்பாடு   ஆதார்அட்டை கட்டாயம்...
X
#Kollimalai control #Aadhar card #mandatory

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்ல கொல்லிமலை மற்றும் முள்ளுக்குறிச்சி சோதனைச்சாவடி போலீஸார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து தற்போது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுத்தலமாக உள்ள கொல்லிமலைக்கு செல்ல, கொல்லிமலை மற்றும் முள்ளுக்குறிச்சி பகுதியில் இரண்டு சோதனை சாவடி அமைந்துள்ளது. மலைமீது வசிக்கும் பொதுமக்கள் கீழே செல்லவும், கீழிருந்து கொல்லிமலைக்கு செல்லும் பொதுமக்களும் கடும் சோதனைக்கு பின் போலீஸார் அனுப்பி வருகின்றனர்.

இது தவிர, வெளி நபர்கள் யாரும் கொல்லிமலைக்கு செல்லாதவாறு ஒவ்வொருவரிடமும் தங்களது ஆதார் அட்டையை போலீஸார் சரிபார்த்து அனுப்பி வைக்கின்றனர். ஆதார் அட்டை இல்லாதவர்கள் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டு, கொல்லிமலைக்கு கீழேயும், மேலேயும் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அதிகாரிகளின் முன்னறிவிப்பு எதுவும் இல்லாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரண்டு மற்றும் நான்கு சாக்கர வாகன ஓட்டிகளும் சோதனை சாவடியை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் எடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டுப்பாடு விதிகளை தளர்த்தவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா