காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு

காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி விரத நோன்பு
X

காளப்பநாய்க்கன்பட்டி கிருஷ்ணன் கோயிலில் கேதார கவுரி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற சுமங்கலி பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

கேதார கவுரி விரத நோன்பை முன்னிட்டு காளப்பநாய்க்கன்பட்டியில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா காளப்பநாய்க்கன்பட்டியில் உள்ள கிருஷ்ணன் கோயில் பஜனை மடத்தில் கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது.

பலிஜவாரு நாயுடுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு இல்லறம் செழிக்கவும், மாங்கல்ய பலம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் சுமங்கலி பூஜை நடத்தினர்.

மஞ்சள், குங்குமம், தாலி கயிறு, தேங்காய், பழம் உள்ளிட்டபொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products