சேந்தமங்கலம் பகுதியில் 26 -ம் தேதி மின்சாரத்தடை என அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில்  26 -ம் தேதி  மின்சாரத்தடை என அறிவிப்பு
X
சேந்தமங்கலம் பகுதியில் 26 -ம் தேதி மின்சாரத்தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 26ம் தேதி மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணைமின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவுர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்ப்பட்டி, லக்கமநாயக்கன்ப்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!