எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது

எருமப்பட்டி அருகே வீட்டில் கள்ள  சாராயம் காய்ச்சியவர் கைது
X
நாமக்கல் எருமப்பட்டி அருகே, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி அருகில் உள்ள சித்தம்பட்டி கிராமத்தில், சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சென்று சோதனை நடத்துமாறு, மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி மணிமாறனுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.

அதன்படி, நாமக்கல் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார், சித்தம்பட்டிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, பெரிய சித்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரகு (46) என்பவர், வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவரது வீட்டில் இருந்து 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 1,100 லிட்டர் ஊறலை அழித்தனர். போலீசார் ரகுவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project