கொல்லிமலையில் தொடர்மழை: நீரில் மூழ்கிய தரைப்பாலம்

கொல்லிமலையில் தொடர்மழை: நீரில் மூழ்கிய  தரைப்பாலம்
X

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்.

Kollimalai Village - கொல்லிமலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புத்தக்கல் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

Kollimalai Village - கொல்லிமலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புத்தக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அங்குள்ள வளப்பூர் நாடு பஞ்சாயத்து, புத்தக்கல் கிராமம் வழியாக ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள கொளத்துக்குழி, பள்ளத்து வளவு, கருமூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!